நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள்தான் சவாலாக உள்ளன'' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வருத்தம் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், 'குஜராத் மாநில நீதித் துறை அகடமி'யை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள்தான் நீதித்துறைக்கு சவாலாக உள்ளன. தவிர சிறிய வழக்குகளை முடித்து வைப்பது கூட, குப்பைகள் நிறைந்திருக்கும் வீட்டை சுத்தப்படுத்தி அகற்றித் தள்ளுவது போல் உள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நான் பதவி வகித்த போது, 2 மாநிலங்களில் முழுவதும் லோக் அதாலத் நடத்தினேன். அதன் மூலம 14 லட்சம் வழக்குகளை முடித்து வைத்தேன். ஆனால், அந்தப் பணி துடைப்பத்தை கையில் பிடித்துக் கொண்டு வீட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது போல் இருப்பதாக உணர்ந்தோம்.
அப்போது, அந்த 2 மாநிலங்களிலும் மிக நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் 200 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளின் விவரங்களை அளிக்கும்படி நீதிபதிகளை கேட்டுக் கொண்டேன். அந்த விவரங்கள் வந்தவுடன், அந்த 200 வழக்குகளை முதலில் முடித்து வைப்பதுதான் இலக்கு என்று நீதிபதிகளிடம் கூறினோம். ஏனெனில், சாதாரணமான, தேவையற்ற வழக்குகளை மட்டும் முடித்து வைப்பது போதாது. மிக பழமையான, புரையோடி போயிருக்கும் வழக்குகளையும் முடித்து வைக்க வேண்டும்.
அதன்பிறகு 6 மாதங்கள் கழிந்த நிலையில் நான் உச்ச நீதிமன்றத்துக்கு வந்துவிட்டேன். அதற்குள் 5,500 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை நீதிபதிகள் முடித்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் குவிந்து கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை தீர்த்து வைக்க கூடுதலாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மாநில முதல்வர்கள் மற்றும் நீதிபதிகள் மாநாட்டில் நான் கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்குர் பேசினார்