ஜி.எஸ்.டி., கவுன்சில் அரசாணை வெளியீடு!!!

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பான சட்டங்களை உருவாக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைப்பதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.







நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பு இருக்கும் வகையில், ஜி.எஸ்.டி.,யை, அடுத்த ஆண்டு ஏப்ரல், 1 முதல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிப்பது; ஜி.எஸ்.டி., சட்டம் உள்ளிட்டவற்றை வரையறுக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைப்பதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன், இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.



மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான இந்த கவுன்சிலில், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் உறுப்பினர்களாக இருப்பர். இந்த கவுன்சிலின் முதல் கூட்டம், வரும், 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்க உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...