அரசு கல்லூரி, வாகனங்கள் பயன்பாடு பட்டியல்!!!

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, அரசு கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களில் வாகனம் மற்றும் எரிபொருள் பயன்பாடு குறித்த பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.



அரசு அதிகாரிகளின் பதவி அடிப்படையில் கார், ஜீப் போன்றவையும், கல்லுாரி பயன்பாட்டுக்கு தேவைக்கேற்ப பஸ், வேன், இரண்டு சக்கர வாகனங்கள், வாட்டர் லாரி போன்றவை அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனங்களின் பயன்பாட்டிற்கு தகுந்தபடி, மாதந்தோறும் எரிப்பொருள் நிரப்பிக்கொள்ள நிதி ஒதுக்கப்படுகிறது.

அரசின் எரிபொருள் உச்சவரம்பு திட்ட ஆணை, 2016 மார்ச் 3ம் தேதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, 2016-17 ம் கல்வியாண்டிற்கான எரிபொருள் செலவினம் மற்றும் உச்சவரம்பு நிர்ணய செயல்பாடுகளை நிதிப்பிரிவு துவக்கியுள்ளது. இதன் பொருட்டு, மொத்த வாகனங்கள் எண்ணிக்கை, எரிப்பொருள் செலவினம், பயன்படுத்தாமல் உள்ள வாகனம் குறித்து பட்டியல் கோரப்பட்டுள்ளது.

உரிய காலஅவகாசத்திற்குள் எரிபொருள் தேவை, வாகன எண்ணிக்கை தகவல் அளிக்காத அரசு அலுவலகங்கள், அரசு கல்லுாரிகளுக்கு எரிபொருள் தேவையில்லை என பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...