தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை:வானிலை மையம்!

கடந்த சில நாட்களாகவே சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பரவலமாக மழை பெய்து கொண்டிருக்க, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அதன் இணையதளத்தில் அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, கடலோர ஆந்திர பிரதேசம், கேரளா, தெற்கு உள் கர்நாடகா ஆகியவை வருடம்தோறும் பெறக்கூடிய மழையில் 30 சதவீதத்தை பெறுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 48 சதவித மழை கிடைக்கிறது.

கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை காலத்தில் 152 சதவீதம் மழை பெய்தது. அதாவது இயல்பை விட அதிகமாக பெய்தது. இந்த வருடம் (2016) வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 90 சதவிகிதம் முதல் 100 சதவீதம் வரை பெய்யும். அதாவது இயல்பான மழை பெய்யும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சற்று அதிகமாகவே பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்தது. அதன் காரணமாக சென்னையில் வெள்ள சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...