உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு !

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற வக்கீல் கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.உள்ளாட்சி தேர்தல்தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி

தொகுதி மறுவரையறை செய்து நடத்த வேண்டும் என்றும், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க., பா.ம.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்கை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த மனுவுக்கு கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்ய காலஅவகாசம் இல்லை. அதனால், 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் வருகிற அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதே நேரம், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.தடை மறுப்புஇதையடுத்து, இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் வாதம் செய்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வர இருந்தது.ஆனால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவும், வாதம் செய்யவும் காலஅவகாசம் வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை 8-ந் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர். அப்போது, தி.மு.க. சார்பில் ஆஜரான வக்கீல் நீலகண்டன், ‘8-ந் தேதி வரை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட இடைக்கால தடைவிதிக்க வேண்டும்’ என்று கேட்டார்.அதற்கு நீதிபதிகள், இந்த நிலையில் இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...