காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி!!!

சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது.


பல்கலையின் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


அடுத்த ஆண்டு முதல்நிலை தேர்வு எழுத, பயிற்சி பெற விரும்புவோருக்கு, நவ., 20ல் தகுதித் தேர்வு நடத்தப்படும்; இதற்கு, அக்., 31க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, http://mkuniversity.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும். பயிலக இயக்குனர் / ஒருங்கிணைப்பாளர், அண்ணா நுாற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலை, மதுரை - 625 021 என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அதில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, இலவச தங்குமிடம், உணவு மற்றும் சாதனங்களுடன் பயிற்சி தரப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...