நெல்லை பல்கலையில் ஐ.டி., வளாகம்; இளைஞர்களுக்கு வாய்ப்பு!!

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உட்பட,நான்கு இடங்களில், தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமைக்க,மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


இதனால், தென் மாவட்ட மாணவர்கள், இந்த துறையில் பிரகாசிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப துறையில், தொழில் துவங்க விரும்புவோருக்கு, இடம் மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்கப்படுகிறது.

அதற்காக, தொழில்நுட்ப வளாகங்களை, மத்திய அரசு அமைத்து வருகிறது. அதை, எஸ்.டி.பி.ஐ., என்ற, இந்திய சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா நிர்வகித்து வருகிறது.


நிதி உதவி:

சென்னை, தரமணியில் அமைந்துள்ள,  எஸ்.டி.பி.ஐ., வளாகத்தில், ஐ.டி., துறையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவங்குவதற்கு,இளம் பட்டதாரிகளுக்கு, பயிற்சி, இடம் மற்றும் நிதி உதவி அளிக்கப்படுகிறது. சென்னையை தொடர்ந்து, தற்போது திருநெல்வேலியில், அதுபோன்ற ஐ.டி., வளாகம் அமைக்க,நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:

ஏராளமான புதிய ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு இடம் அளித்து,தொழில் ரீதியாக உதவி வருகிறோம். இதுவரை, 48நிறுவனங்கள் உதவி பெற்று, நல்ல நிலையில் செயல்படுகின்றன. அதனால், அதேபோன்ற அமைப்பை, மற்ற இடங்களிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்; விரைவில்,கட்டடம் கட்டும் பணி துவங்கும்.

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்கள், ஐ.டி., சார்ந்த தொழில் உதவி பெறுவதற்கு, சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அதை தவிர்க்கவும், ஐ.டி.,துறையில், இரண்டாம் நிலை நகரங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதும் தான், இதன் நோக்கம்.

கடனுதவி:

அடுத்ததாக மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும், ஐ.டி., பூங்கா உருவாக்க, தமிழக அரசிடம் இடம் கேட்டுள்ளோம்.நெல்லை வளாகத்தில், ஐ.டி., மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கான, சிறந்த செயல் திட்டத்துடன், எங்களை அணுகும் இளம் பட்டதாரிகளுக்கு, இடம் அளிக்கப்படும்.

சிறு நிறுவனங்களை துவங்குவதற்கு, மத்திய அரசு நிதி அளிக்கிறது. அதனால், தகுதியான இளைஞர்களுக்கு, கடனுதவிக்கும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...