தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வை மீண்டும் நடத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடக்கும் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்பை வரும் 25ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மனித வளத்துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் பதவியேற்றபின்னர் அவர் அறிவிக்கும் மிகப்பெரிய அறிவிப்பு இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அவர் மாணவர்களை ’ஆல் பாஸ்’ ஆக்கும் திட்டம் தொடர்பான புதிய கொள்கை அறிவிக்க உள்ளார்.
அதன்படி, 5ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள். அதன்பிறகு மாணவர்களை 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் ஆக்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெயில் ஆகும் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு, மாணவர்களின் சுமையை குறைக்கும்வகையில் மத்திய அரசு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2011ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சி.பி.எஸ்.இ. ரத்து செய்தது. மேலும் உயர்கல்விக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் தேவைப்பட்டால் தேர்வு எழுதலாம் என அறிவித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டனர்.
இப்போது, மீண்டும் சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு நடத்தப்படும் என்னும் அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது