சிறுமிகளை திருமணம் செய்தால் 30 ஆண்டுகள் சிறை!!

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 18 வயதுக்குக்கீழ் உள்ள 15 கோடி இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். பெரும்பாலும் இந்தத் திருமணங்கள் நிதி பிரச்னை மற்றும் கலாச்சார நெறிமுறையின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் அது

மாறாமல் உள்ளது. இதனால் திருமணமான பள்ளிப்பருவ பெண்கள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன. இதனால் பிரசவத்தின்போது இறக்கும் ஆபத்து, எச்ஐவி பதிப்பு, பாலியல் வன்முறை போன்றவை அதிகளவில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், தான்சானியா நாட்டில் பள்ளிச் சிறுமிகளை திருமணம் செய்தால் 30 ஆண்டுகள் சிறை என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஏழை நாடுதான் தான்சானியா. இங்கு படிக்கும் வயதில் உள்ள பெரும்பாலான சிறுமிகளுக்கு திருமணம் செய்யப்படுகிறது. உலகிலேயே இளம் வயது கருத்தறித்தலில் தான்சானியாதான் முதலில் உள்ளது. தான்சானியாவில் 18 வயதுக்குட்பட்ட 37% பெண்கள் திருமணமானவர்கள்.

இந்தப் போக்கை மாற்ற சிறுமிகளை திருமணம் செய்வது சட்ட விரோதமானது என்றும் தொடக்கப் பள்ளி அல்லது உயர்நிலைப்பள்ளி சிறுமிகளை திருமணம் செய்தால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் கடந்த ஜுன் மாதம் தான்சானியா பாராளுமன்றம் புதிய சட்டத்தை நிறைவேற்றியது.

இதற்குமுன், 14 வயது இளம்பெண்கள் தங்கள் பெற்றோர் சம்மதம் இருந்தால் அல்லது ஒரு சிறப்பு நீதிமன்றம் சம்மதம் இருந்தால் சட்டப்படி திருமணம் செய்ய முடியும். ஆனால் இப்போது அமல்படுத்தப்பட்ட சட்டம் குழந்தைத் திருமணத்தை தடை செய்துள்ளது. எனவே, இப்போது 14 வயதுப் பெண்கள் திருமணம் செய்வது சட்ட விரோதமானது. இந்த புதிய சட்டத்தால் இளம் பெண்கள் தங்கள் கல்வி வாய்ப்பை மேம்படுத்த முடியும். மேலும் இளம்வயது கர்ப்பத்தையும் தடுக்க முடியும்.

சமீபத்தில், தான்சானியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பநிலைக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை இலவசமாக வழங்கும் திட்டத்தை தான்சானிய அரசு தொடங்கியுள்ளது. இப்போது, இலவச கல்விக் கொள்கையுடன் இந்த திருமணச் சட்டமும் கைகோர்த்துள்ளது. மேலும் பள்ளிகளுக்கு செல்லவிடாமல் தடுக்கும் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் தான்சானியா அரசு எச்சரித்துள்ளது. எனினும் இந்தச் சட்டத்தில் குளறுபடி உள்ளது. ஏனெனில் எந்த ஆணும் திருமணம் நடப்பதாகத் தெரிவிப்பதில்லை. குறிப்பாக, பெண்களின் குடும்பத்துக்கு நிதி தேவைப்படும்போது இதுபோன்ற இளம் வயது திருமணம் நடத்தப்படுகிறது. எனவே, அந்தப் பகுதியில் உள்ள பள்ளித் தலைவர்கள், சமீபத்தில் நடந்த குழந்தைத் திருமணங்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

இதனால், முதலில் இதுபோன்ற குழந்தைகள் திருமணம் தடுக்கப்படும். அடுத்த நடவடிக்கையாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பிரசவத்துக்குப் பிறகு பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா நாட்டின் தலைவர், “பள்ளிச் சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...