சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இதில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் 39 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். மீதமிருந்த 36 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பணியாற்றும் 19 வழக்கறிஞர்கள் மற்றும் 11 மாவட்ட நீதிபதிகள் என 30 பேர் பட்டியலை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி அடங்கிய குழு கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது. அதில், 15 பேரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அடங்கிய நீதிபதிகள் குழு, சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பரிந்துரை செய்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 15 புதிய நீதிபதிகள்:
எஸ்.பாஸ்கர், ஏ.எம்.பஷீர் அகமது, சி.வி.கார்த்திகேயன், டீக்காராமன், என்.சேஷாயி, ஜி.ஜெயச்சந்திரன் (சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு), ஆகிய ஆறு மாவட்ட நீதிபதிகளும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்.பார்த்திபன், ஆர்.சுரேஷ்குமார் ஆர்.சுப்பிரமணியன், எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.சுந்தர், அரசு வழக்கறிஞர்கள் எம்.எஸ்.ரமேஷ், அனிதா சுமந்த் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் கோவிந்தராஜ் , மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் நிஷாபானு ஆகிய 15 பேரும் புதிய நீதிபதிகள் நியமனப் பட்டியலில் இடம்பெற்றனர். இவர்களின் பரிந்துரைப் பட்டியல் சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப்பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, பரிந்துரை செய்யப்பட்ட 15 பெயர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இந்த 15 புதிய நீதிபதிகளுக்கும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகளின் இடங்களில், 39 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இதுபோக மீதம் 36 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில், இன்று 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்கின்றனர். பின்னர், நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயரும். இருப்பினும் 21 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பதும், அது எப்போது நிரப்பப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.