மனித உரிமை ஆணைய இணையதளம் முடக்கம்?

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணையதளம், நேற்று செயல் இழந்தது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், அதிகாரப்பூர்வ இணையதளம், நேற்று முன்தினம் முடங்கியது. பாகிஸ்தானைச் சேர்ந்த விஷமி கள், இணையதளத்தை முடக்கியதாக கூறப்படுகிறது. மேலும், நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் முடக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின், அதிகாரப்பூர்வ இணையதளமான, nhrc.nic.in நேற்று மாலை, திடீரென செயல் இழந்தது. இதுகுறித்து, டில்லியில் உள்ள ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'தகவல்களை சேமிக்கும், சர்வரில் பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம்; சரியாகி விடும்' என்றனர். நேற்று இரவிலும், இணையதளம் செயல்படவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...