*பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16–ந் தேதி !

*பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16–ந் தேதி தொடக்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடெல்லிபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 3–வது அல்லது 4–வது வாரத்தில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது நவம்பர் 16–ந் தேதியே தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.இது குறித்து பாராளுமன்ற செயலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
, ‘16–வது மக்களவையின் 10–வது அமர்வு நவம்பர் 16–ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அரசின் அலுவல்களுக்கு உட்பட்டு இந்த அமர்வு டிசம்பர் 16–ந் தேதி நிறைவு பெற வாய்ப்பு உள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது. இதைப்போன்ற ஒரு அறிவிப்பை மேல்–சபை செயலாளரும் வெளியிட்டு உள்ளார்.ஒரு மாதம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் உரி ராணுவ முகாம் தாக்குதல், அதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘சர்ஜிகல்’ நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடம்பெறும் என தெரிகிறது. மேலும் மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. தொடர்பான மசோதாக்கள் உள்பட ஏராளமான மசோதாக்களையும் இந்த தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...