இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் சலுகை பெற வேண்டிய தலைவர்கள் வரும் 2ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை சமர்ப்பிக்க வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார். தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற
உள்ளது. அதற்கான தேர்தல் தேதி மற்றும் வேட்புமனு தொடர்பான அறிவிப்புகள் சில தினங்கள் முன்பு அறிவிக்கப்பட்டன. தற்போது அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் சலுகை பெற வேண்டிய தலைவர்கள் வரும் 2ஆம் தேதிக்குள் தங்களது பெயரைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, அரசியல்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக செய்யும் விமானப்பயணம் மற்றும் இதர பயணச் செலவுகள் வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேராது. அரசியல்கட்சிகள் பிரச்சாரத்துக்குச் செல்லும் தலைவர்களின் பட்டியலை முன்கூட்டியே தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்கும்பட்சத்தில், இந்தச் சலுகையை பெற முடியும். இதன்படி அங்கீகாரமற்ற அரசியல்கட்சிகளாக இருந்தால் 20 பேர், அங்கீகாரம் பெற்ற அரசியல்கட்சிகளாக இருந்தால் 40 பேரின் பெயர்களை தலைமை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட ஒரு வாரத்துக்குள் அளிக்க வேண்டும். பெயர் சமர்ப்பிக்கப்பட்ட கட்சி தலைவர்களின் பயணம் தொடர்பான செலவீனங்கள் தவிர, தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கட்சியின் இதர செலவீனங்கள் வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேரும். வேட்பாளருக்காக இதர கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்தால், அதுவும் சம்மந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேரும்” என்று கூறப்பட்டுள்ளது.