1 மணி வரை சந்தையில் தொழிலாளி; பிறகு கல்லூரியில் படிப்பாளி மாணவர்களின் 'சுகமான சுமை' !

காரைக்குடி,'நம் நாட்டில் வேலை கிடைக்கல... வருமானம் இல்ல. அதனால வெளிநாடு போறேன்' என்பது சில இளைஞர்களின் ஆதங்கம். அங்கு சென்று அடிமை போல வேலை செய்யவும், அவர்கள் தயங்குவதில்லை.
ஆனால், 'நம்ம ஊரிலேயே ஏகப்பட்ட வேலை காலியா இருக்கு. உழைக்க மனசுதான் தேவை' என சமூகத்திற்கு 'பாடம்' சொல்கின்றனர், கல்லுாரி பாடம் படிக்கும் காரைக்குடி மாணவர்கள்.

'உன்னை மூடை துாக்கியாவது காப்பாற்றுவேன்' என்பது உணர்ச்சி பெருக்கில் ஆண்கள் கூறும் வார்த்தைகள். ஆனால், மூடை துாக்கி, அதன்மூலம் கல்வி கட்டண தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர், காரைக்குடி கல்லுாரி மாணவர்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் சந்தைகளில் மூடை துாக்குபவர்களுக்கு பல சங்கங்கள் உண்டு. காரைக்குடியை சேர்ந்த 'சுகமான சுமைகள்' சங்கத்தில் 24 பேர் உறுப்பினர்கள். இதில், சண்முகம் (பி.எஸ்சி.,), விக்னேஷ் (எம்.எஸ்சி.,), சுந்தர், வெங்கடேஷ் (பி.இ.,), முகம்மது யாசின், சூர்யா
(டிப்ளமோ) ஆகியோர் கல்லுாரியில் படிக்கின்றனர்.மூடை துாக்குவதுடன்
விடுமுறையில், திருமண வீடுகளில் பந்தி பரிமாறும் பணியிலும் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு 400 முதல் 600 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:எம்.ரமேஷ்பாபு, தலைவர், சுகமான சுமைகள்: உழைக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கிறோம். 'படிப்பு செலவுக்காக வேலை பார்க்க வருகிறேன்' என எந்த மாணவர் கேட்டாலும் உடனே வேலை கொடுத்து விடுவோம்.
ஒவ்வொருவருக்கும் வருகை பதிவேடு உண்டு. மூடை இறக்குவதில் பாகுபாடு கிடையாது. மொத்த வசூலை பிரித்து கொடுத்து விடுவோம். மாணவர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை. கல்லுாரிக்கு செல்வதால் காலை 8:00 மணிக்கு அவர்களை அனுப்பி விடுவோம். அதன் பிறகு மூடைகள் இருந்தால் நாங்கள் இறக்கி விடுவோம். கட்டாயம் வர வேண்டும் என்பது இல்லை. தேர்வு நேரங்களில், தேவைக்கேற்ப விடுமுறை எடுக்க
முழு அனுமதி உண்டு.ஆர்.விக்னேஷ், எம்.எஸ்சி., மாணவர், கண்டிப்பட்டி: காய்கறி விற்க வரும் போது இந்த சங்கத்தின் அறிமுகம் கிடைத்து, இதில் சேர்ந்தேன். தற்போது அழகப்பா பல்கலையில் எம்.எஸ்சி., (விலங்கியல்) படிக்கிறேன்.
மூடை துாக்கும் வருமானம் மூலம் கல்லுாரி கட்டணம் கட்டுவேன்; வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பேன். காலையில் 4:00 மணிக்கு எழுவதால், நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கிறது. படிப்புக்கு பாதிப்பும் இல்லை. உழைத்து முன்னேற வேண்டும்.
படித்ததற்கான வேலை தான் பார்க்க வேண்டும் என்பது இல்லை. வேலை கிடைக்கும் வரை எந்த வேலை இருந்தாலும் செய்வோம். வெளிநாட்டுக்கு செல்பவர்கள் எந்த வேலை என்றாலும் கூச்சம் இல்லாமல் செய்கின்றனர். ஆனால், இங்கோ சில வேலைகளை இழிவாக பார்க்கின்றனர். எந்த வேலையும் இழிவு அல்ல; எல்லாம் சுகமான சுமைகளே.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...