தென்மேற்கு பருவமழை அக்டோபரில் எப்படி??

தென்மேற்கு பருவமழை கூடுதலாக ஒரு மாதம் நீடித்த போதும், அக்டோபரில் இயல்பான அளவை விட, 67 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. கேரளாவில், ஜூன், 8ல் துவங்கிய தென்மேற்கு பருவமழை, ஜூலையில் நாடு முழுவதும் பரவி, ஓரளவு மழையை கொடுத்தது. இந்த பருவமழை காலம், செப்டம்பரில் முடிவடையும். இந்த
ஆண்டு, கூடுதலாக ஒரு மாதம் என, அக்., 25 வரை நீடித்தது. அதனால், வடகிழக்கு பருவமழை தள்ளிப்போனது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கான வானிலை முன் கணிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டது. அதில், 'நாட்டின் கடைக்கோடி தென் பகுதியில், நாளை முதல்

வடகிழக்கு பருவமழை துவங்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நாட்டின் எப்பகுதியிலும், குறிப்பிட்ட அளவில் மழை பெய்யவில்லை. சராசரியாக வெறும், 1.1 மி.மீ., மழை மட்டுமே பதிவாகியுள்ளது; ஆனால், 13.3 மி.மீ., பெய்ய வேண்டும். தமிழகத்தில், கடந்த வாரம், 47.5 மி.மீ., மழை பெய்ய வேண்டும்; 14.6 மி.மீ., மழையே பெய்துள்ளது. அதாவது, 69 சதவீதம் குறைவாகும். அக்டோபரில், நாடு முழுவதும் சராசரியாக, 73.4 மி.மீ., மழை பெய்ய வேண்டும்; 50.9 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. தமிழகத்தில், 150 மி.மீ., பதிவாக வேண்டும்; 67 சதவீதம் குறைவாக, 49.5 மி.மீ., மட்டுமே மழை பதிவாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...