2 லட்சமாவது மரக்கன்று நடும் விழா... பசுமை தீபாவளி!!

வனத்துக்குள் திருப்பூர்-2' திட்டத்தின் கீழ், இரண்டு லட்சமாவது மரக்கன்று, இன்று நடப்படுகிறது. தீபாவளி நன்னாளில், பட்டாசுகள் மட்டுமின்றி, மரக்கன்று நட்டு, பசுமை தீபாவளி கொண்டாட, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், மரக்கன்றுகள் நட்டு, இரண்டு
ஆண்டுகளுக்கு பராமரிக்கும் "வனத்துக்குள் திருப்பூர்'

திட்டம் செயல்படுத்தப்படுகிறது. "வெற்றி' அமைப்பின் இம்முயற்சியில் "தினமலர்' நாளிதழ் இணைந்து, பசுமை குறித்தும்,

மரங்கள் வளர்ப்பின் அவசியம் குறித்தும், பொதுமக்களிடையே, விழிப்புணர்வை

ஏற்படுத்தி வருகிறது.

கடந்தாண்டு, ஒரு லட்சம் மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; பொதுமக்களின் ஆதரவால், இலக்கையும் தாண்டி, 1.35 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இம்

மரங்களுக்கு, டிராக்டர்கள் மூலம், நீர் விட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, இரண்டு லட்சம் மரக்கன்று நட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்கும் "வனத்துக்குள் திருப்பூர்-2' துவக்கப்பட்டது.

கடந்த ஜூலை, 3ல் பணி துவங்கி, மரக்

கன்றுகள் நடும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால், மரக்கன்று நடும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்தாண்டு இலக்கான, இரண்டு லட்சம் மரக்கன்று என்பது, இன்று எட்டப்படுகிறது. இரண்டு லட்சமாவது

மரக்கன்று நடும் விழா, குடிமங்கலம் அருகேயுள்ள, பிரைம் டெக்ஸ், எஸ்.ஆர்.ஜி., அப்பேரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான,

ஜனமூலை தோட்டத்தில், இன்று காலை, 8:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

காற்றை மாசுபடுத்தும் பட்டாசுகளை தவிர்த்து, சுற்றுச்சூழல் காக்கும் மரக்கன்றுகளை நட்டு, "பசுமை தீபாவளி' கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மரக்கன்று நடும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடிப்பதால், காற்று மாசு, ஒலி மாசு

அதிகரிக்கிறது.

இத்தகைய மாசுபாட்டை தடுத்து,

இயற்கையாக காற்றை மரங்கள் நமக்கு

வழங்குகின்றன. தீபாவளியை, பட்டாசுகளுடன் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்பதில்லை; இந்நன்னாளில், மரங்களை நட்டு, "பசுமை தீபாவளி' கொண்டாட

வேண்டும் என்ற நோக்கத்தோடு, "வனத்துக்குள் திருப்பூர்' குழு செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு, ஒரு லட்சமாவது மரக்கன்று நடும் விழா, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் நடந்தது. அதே போல்,

இந்தாண்டும், இரண்டு லட்சமாவது

மரக்கன்று, இன்று நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு, நீர் விடுதல், பராமரித்தல் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்

படுகிறது. இந்தாண்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டியும், கூடுதலாக, 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட, "வனத்துக்குள் திருப்பூர்' திட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...