வலுவிழந்தது 'கியான்ட்' இன்று முதல் கனமழை !

வங்கக் கடலை மிரட்டிய, 'கியான்ட்' புயல், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அதனால், சென்னை உட்பட, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில், இன்று இரவு முதல் கனமழை பெய்யலாம். வங்கக் கடலின் மத்திய பகுதியில், அக்., 21ல், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது புயலாக மாறி,
மியான்மரை தாக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதற்கேற்ப, 'கியான்ட்' புயலாக உருவாகி, மியான்மர் அருகே சென்றது.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, இந்த புயல், திடீரென இந்தியாவின் பக்கம், 'ப' வடிவில் திரும்பி விட்டது. நேற்று அதிகாலை, இப்புயல் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னை மற்றும் ஆந்திராவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியை நோக்கி நகரும் இந்த மண்டலம், இன்று தீவிரத்தை இழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதனால், ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்கள், தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மற்றும் புதுவையின் வடக்கு கடலோர மாவட்டங்களில், இன்று இரவு முதல், அக்., 31 வரை, கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில், வெப்பச்சலனம் காரணமாக, லேசான மழை பெய்யலாம். மீனவர்கள், ஆந்திர கடற்பகுதியை நெருங்கி செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டு உள்ளனர். சென்னை, கடலுார், காட்டுப்பள்ளி மற்றும் நாகை துறைமுகங்களில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...