சீன பல்ப் வெடித்து 400 பேருக்கு பார்வை இழப்பு ?

திருவிழாவில் சீன பல்புகள் வெடித்துச் சிதறியதில் 400 பேர் கண் பார்வை இழந்துள்ளனர். சத்தீஸ்கரில் ராஜ் நந்தங்கான் என்னும் ஊரில் கலாச்சார விழா நடைபெற்றது. அங்கு விழா அரங்கை அலங்கரிக்கும் வகையில் சீன பல்புகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், திடீரென ஆறு சீன பல்புகள் வெடித்துச் சிதறியுள்ளது. அப்போது அங்கு கூடியிருந்த மக்களின் மீது உடைந்த பல்ப் சிதறிய

காரணத்தால், சுமார் 400 பேருக்கு பார்வை பறிபோன பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சீன தயாரிப்புகள் ஆபத்தானவை என்று பல வாடிக்கையாளர்கள் சொல்லி வந்த நிலையில் அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. சீனப் பொருட்களை எந்த தரக்கட்டுப்பாடும் இல்லாமல் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிப்பது பற்றி மத்திய அரசு யோசிக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...