பணப்பலன் ரூ.4,000 கோடி எங்கே? போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆதங்கம்???

 'கடந்த, 2012 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள், 4,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்படாமல் உள்ளது' என, போக்குவரத்து ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், சென்னை, பல்லவன் இல்லம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பின் பொருளாளர்

வரதராஜன் பேசியதாவது:

தமிழகம் முழுவதும், அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோர், 62 ஆயிரம் பேர் உள்ளனர். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, மருத்துவ வசதி ஏற்படுத்தி தருவதுடன், ஓய்வூதியர்கள் மரணமடைந்தால், அவர்கள் குடும்பத்திற்கு உதவித்தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

கடந்த, 2003ல், விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2012 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள், 4,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்படாமல் உள்ளது. 2012 முதல் வழங்கப்படாமல் உள்ள பணிக்கொடையை உடனே வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும், 20ம் தேதிக்குள் வழங்கப்பட்டு வந்த சேமநல நிதியை வழங்காமல் உள்ளனர்; அதையும் உடனே வழங்க வேண்டும்.

அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வான, 6 சதவீதத்தை, இம்மாத பென்ஷன் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும். மருத்துவ அடிப்படையில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...