ரேஷன் கடைகளில், நான்கு கோடி பேர், 'ஆதார்' விபரம் பதிவு செய்துள்ளதால், விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை, கிழிந்து, கந்தல் கோலத்தில் இருப்பதால், 'ஸ்மார்ட்' கார்டு வடிவில், புதிய ரேஷன் கார்டு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவியை, உணவு வழங்கல் துறை
வழங்கியுள்ளது. அதன்மூலம், 'ஆதார்' அட்டை, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை, ரேஷன் ஊழியர்கள் பதிவு செய்கின்றனர்.
நேற்று வரை, 1.95 கோடி ரேஷன் கார்டுகள், 1.51 கோடி மொபைல் போன் எண்கள், 4.04 கோடி ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஒருங்கிணைப்பு பணி,
தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்ட செலவு, 318 கோடி ரூபாய். ரேஷன் கடைக்கு வராமல், வீட்டில் இருந்தபடியே, ஆதார் விபரம் பதிவு செய்ய, 'மொபைல் ஆப்' வசதி துவக் கப்பட்டுள்ளது. ரேஷன் கடை மூலமாகவும், விரை வாக ஆதார் பதிவு செய்யும்படி, வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தான், ஆதார் பதிவு குறைவாக உள்ளது. அவர்கள், விரை வில் பதிவு செய்வதன் மூலம்,இரு மாதங்களுக்குள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் கட்டம்!
ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடப் பட்டு, முதல் கட்டமாக, அரியலுார், பெரம்பலுா ரில் செயல் படுத்த, உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் குறித்து, தமிழக அரசு, விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது.