உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போயுள்ள நிலையில், பெரும்தொகை கொடுத்து 'சீட்' வாங்கிய வேட்பாளர்கள், பெரும் பீதியில் மூழ்கியுள்ளனர்.
தமிழகத்தில், உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது; இதற்கு, மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவையிலும்,
பழைய கவுன்சிலர்கள் பலருக்கு 'சீட்' கொடுத்தது, கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜெ., வெளியிடாத பட்டியல்!
மருத்துவமனையில், முதல்வர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த வேட்பாளர் பட்டியலை, அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தான் தயார் செய்தனர் என்பது ஊரறிந்த சேதியானது. கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள், கட்சிக்கே சம்மந்தம் இல்லாதவர்கள், முக்கிய நிர்வாகிகளின் குடும்பத்தினர், பெரிய தொகையை கொடுத்தவர்கள் போன்றோருக்கு 'சீட்' வழங்கப்பட்டதாகக் கூறி, அ.தி.மு.க., நிர்வாகிகள், பல விதமான போராட்டங்களிலும் குதித்தனர்.
குறிப்பாக, கோவையில் 'சிட்டிங்' ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 80 பேர்களில், 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது, கட்சி நிர்வாகிகளிடம் கடுமையான அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இவர்களைத் தவிர்த்து, 'சிட்டிங்' கவுன்சிலர்கள் சிலரின் குடும்பங்களில் மனைவி, மகள் போன்றோருக்கு, 'சீட்' தரப்பட்டதும், வாய்ப்புக் கிடைக்காதவர்களின் கோபத்தை மேலும் கிளறி விட்டது.
இது, ஜெ.,க்கு தெரியாமல் வந்த பட்டியல் என்பதால், இதனை எதிர்த்து வெளிப்படையாகப் போராடுவதற்கு எல்லாரும் தயாராகி விட்டனர். ஆனால், அவசர கோலத்தில் தேர்தலை அறிவித்ததால், இந்த போராட்டங்கள் எடுபடவில்லை. எதிர்ப்புக்காக எந்த வேட்பாளரும் மாற்றப்படவுமில்லை. இதனால், யாரிடம் முறையிடுவது என்பதே தெரியாமல், உச்சக்கட்ட விரக்தியில், ஆளுங்கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
இந்நிலையில் தான், தேர்தலுக்கு ஐகோர்ட் தடை விதித்தது. பழங்குடியினர்க்கான ஒதுக்கீடு, 2011 மக்கள் தொகை அடிப்படையில் வார்டு பிரிப்பு என பல்வேறு விஷயங்களும், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை, ஆதியிலிருந்து துவங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இதனால், வார்டு ஒதுக்கீடு, வகுப்புவாரியாக மாறவும், ஆண் அல்லது பெண் வார்டாக மாறவும் வாய்ப்பு அதிகம்.
ஒரு வேளை இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால், இப்போது பணம் கொடுத்தும், 'ஆள்' பிடித்தும் 'சீட்' வாங்கிய பலரது வாய்ப்பும் பறிபோகும் என்பது நிச்சயம். இதனால், தங்களின் கவுன்சிலர் கனவு கலைந்து போவதோடு, 'சீட்'டுக்காக பெரும் தலைகளிடம் கொடுத்த பெரும் தொகையும் திரும்ப வருமோ என்ற அச்சமும், ஆளுங்கட்சி வேட்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்றைய ஐகோர்ட் உத்தரவால், தேர்தல் தேதி தள்ளிப்போனதும், வேட்பாளர்களின் பீதி, இன்னும் அதிகமாயுள்ளது.
அம்மா வருவாங்க; சும்மா தருவாங்க!
அ.தி.மு.க.,வில் நீண்ட கால விசுவாசியாக இருந்தவர்களுக்கும்,
முதல்வரே நேரடியாக அறிந்த கட்சி நிர்வாகிகள் சிலருக்கும், கோவை
மாநகராட்சியில் போட்டியிட இந்த தேர்தலில் 'சீட்' தரப்படவில்லை. இதற்கு, பணம் தராததே காரணமென்று, புகார் கிளம்பியுள்ளது. இது குறித்து, வாய்ப்பிழந்த கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''தேர்தல் தேதி தள்ளிப்போவது, எங்களுக்கு பெருமகிழ்ச்சியாகவுள்ளது; அதற்குள் மீண்டும் 'அம்மா' (முதல்வர்) நலம் பெற்று வருவார்; எங்களைப் போன்ற உண்மை விசுவாசிகளுக்கு 'சீட்' தருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.