புதுடெல்லிதற்போது, நாடு முழுவதும் 8–ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்காமல், அனைவரையும் கட்டாய தேர்ச்சி பெற வைக்கும் திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் துணைக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. பஞ்சாப் மாநில கல்வி மந்திரி தல்ஜித்சிங் சீமா தலைமையிலான அக்குழு, தனது ஆய்வை முடித்துக்கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் 189 பக்க அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது.அதில், ‘8–ம் வகுப்புவரை தேர்ச்சி’ திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்க வேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக செலவிட வேண்டும், ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் கண்டிப்பாக இருக்க வேண்டும்’ ஆகிய சிபாரிசுகளையும் செய்துள்ளது.இந்த சிபாரிசுகள் குறித்து 25–ந் தேதி அனைத்து மாநில கல்வி மந்திரிகளும் பங்கேற்கும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று குழுவின் தலைவர் தல்ஜித்சிங் சீமா தெரிவித்தார்