பணத்துக்கு 'வேட்டு' வச்சிருவாங்க! தீபாவளி நேர 'ஆன்-லைன் ஆசாமிகள்' சைபர் கிரைம் போலீசார் அறிவுரை!!

பண்டிகை காலத்தை பயன்படுத்தி, பொதுமக்களின் வங்கி கணக்கில்,

'ஆன்-லைனில்' மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன; இதுபோன்ற மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க, 'சைபர் க்ரைம்' போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.




கோவை மாநகரில், கடந்த சில ஆண்டுகளாக, 'ஆன்-லைன்' மோசடி சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகிறது. கடந்த ஒன்பது மாதங்களில், 'ஆன்-லைன்' மோசடி தொடர்பாக, 265 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 'ஆன்-லைன்' மோசடி சம்பவங்கள் அதிகரிப்பை தொடர்ந்து, வங்கி

களுக்கு 'சைபர் க்ரைம்' போலீசார் சுற்றறிக்கை அனுப்பினர்.



அதில், 'வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல்போன் எண்களை ரகசியம் காக்க வேண்டும், வங்கி 'சாப்ட்வேரி'ல் நுழைந்து, வாடிக்கையாளர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும், ரகசிய குறியீடு எண் அனுப்ப முடியாதவாறு, தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, அறிவுறுத்தினர்.



வங்கிகளில் இருந்து பேசுவதாக, மொபைல்போன் எண்ணுக்கு யாராவது தொடர்பு கொண்டால், ஒருபோதும் 'ஏ.டி.எம்' மற்றும் 'கிரெடிட்' கார்டு விபரங்களை தெரிவிக்க கூடாது, என, பல்வேறு வகைகளில் அறிவுரை வழங்கப்பட்டது.



இருந்தும், வாடிக்கையாளர்களிடம் போனில் பேசும் மோசடி நபர்கள், அவர்களிடம் ரகசிய குறியீடு எண்களை பெற்று, பணம் எடுக்கும் சம்பவங்கள் குறையவில்லை. தற்போது தீபாவளி பண்டிகை நேரத்தை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகள் போன்று பேசி, மோசடி செய்யும் சம்பவங்கள், அதிகளவு நடக்க துவங்கியுள்ளன. நாள்தோறும், பல்லாயிரம் பேருக்கு, இதுபோன்ற மோசடி போன் அழைப்புகள் வருகின்றன.



இது போன்ற 'ஆன்-லைன்' மோசடி நபர்களிடம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, 'சைபர் கிரைம்' போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



மாநகர சைபர் கிரைம் போலீசார்

கூறியதாவது:

பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வங்கி கணக்குகளில் அதிகளவு பணம் இருக்கும். இதனால், 'ஆன்-லைன்' மோசடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து, ஒருபோதும் வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீடு எண்களை கேட்க மாட்டார்கள். யாரேனும் போனில் தொடர்பு கொண்டு, வங்கி கணக்கு,

ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு தகவல்களை கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.



சந்தேக நபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். வங்கிகளுக்கும் 'ஆன்-லைன்' மோசடி தடுப்பு தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து

அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...