தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஓவியம், தையல், இசை, நடனம், விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசு தொழில்நுட்ப தேர்வுகளை நடத்தும். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு சொற்ப அளவிலேயே தேர்வர்கள்

விண்ணப்பிப்பதாகக் கூறி, ஆண்டுக்கு ஒருமுறை நவம்பர் மாதத்தில் மட்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு அரசு தொழில்நுட்ப தேர்வு முற்றிலுமாக நடத்தாமல் நிறுத்தப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், கடந்த 2014ஆம் ஆண்டு தொழில்நுட்ப தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அதன் தேர்வு முடிவுகள் கால தாமதமாகவே வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள் பத்து மாதங்களாக வெளியிடப்படவில்லை. இப்போது பத்து மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி, ‘இந்தத் தேர்வுக்கான, மேல்நிலை மற்றும் கீழ்நிலை சான்றிதழ்கள், அந்தந்தத் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரால், அக்டோபர் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். தேர்ச்சி பெறாதோருக்கு, தேர்வு மையத்திலேயே, அதற்கான குறிப்பாணை வழங்கப்படும். மேலும், இருப்பிட முகவரிக்கு சான்றிதழ்கள் அனுப்பப்பட மாட்டாது’ என்று தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...