வங்க கடலை மிரட்டும் முதலை புயல்:தீபாவளி நாளில் சென்னைக்கு பாதிப்பு???

வங்க கடலை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. முதலை என்ற பொருள்படும், 'கியான்ட்' என்ற இந்த புயல், அக்., 28, 29ல், ஆந்திராவில் கரை கடக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.


வங்க கடலில் இந்தியாவுக்கு தென் கிழக்கு பகுதியில், ஒரு வாரத்துக்கு முன், இரண்டு காற்றழுத்த மேல் அடுக்கு சுழற்சிகள் உருவாகின. இவை, இரு தினங்களுக்கு முன், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறின. இவை, புயலாக மாறி, மியான்மரை தாக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மியான்மர் அருகே, 'ப' வடிவில், இந்தியாவை நோக்கி திரும்பி விட்டது.

ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதற்கு, 'மொன்' என்ற பர்மிய மொழியில், கியான்ட் என, பெயரிடப்பட்டுள்ளது. 'முதலை என்ற அர்த்தமுள்ள இப்புயல், அக்.,28ல், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்க ராணுவத்தின், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கான ஒருங்கிணைந்த புயல் எச்சரிக்கை மையம், வேறு விதமாக எச்சரித்துள்ளது. தீபாவளி நாளான, அக்.,29ல், சென்னையில் இருந்து, 300 கி.மீ., துாரத்தில் உள்ள ஓங்கோலில், கியான்ட் கரை கடக்கலாம் என கணித்துள்ளது.

புயல் குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

வங்க கடலில், அந்தமானில் இருந்து, 620 கி.மீ., வடக்கு; வட மேற்கில், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து, 710 கி.மீ., தெற்கு; தென் கிழக்கில், விசாகப்பட்டினத்தில் இருந்து, 850 கி.மீ., கிழக்கில், 'கியான்ட்' புயல் மையம் கொண்டுள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்பகுதியில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

வங்க கடலில், ஆந்திராவுக்கு கிழக்கு கடற்பகுதியில், நாளை முதல் காற்றின் வேகம், 100 கி.மீ., வேகத்தில் இருக்கும். நாளை, ஆந்திரா கடல் பகுதிக்குள் நுழையும் புயல், அக்., 28ல் விசாகப்பட்டினம் வழியே கரையை கடக்கலாம்.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'இந்த புயலால், சென்னை, புதுச்சேரி உட்பட கிழக்கு கடற்கரை பகுதிகளில், லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...