ஐ.நா., பொதுச்செயலராக ஆன்டோனியோ கட்டரஸ் தேர்வு!

ஐ.நா., சபையின் புதிய பொதுச்செயலராக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஆன்டோனியோ கட்டரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பான்-கி-மூன் ஓய்வு

ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக
தென்கொரிய நாட்டை சேர்ந்த பான்-கி-மூன் உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் இந்தாண்டு இறுதியுடன் ஓய்வு பெற உள்ளார்.



புதிய பொதுச்செயலர் தேர்வு

இதையடுத்து, புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது. இதுதொடர்பான, நடந்த வாக்கெடுப்பில் போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் அதிக ஓட்டுகள் பெற்று தேர்வானார். இவருக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர் தற்போது ஐ.நா., சபையின் அகதிகள் அமைப்பின் தலைவராக உள்ளார். கட்டரஸ் வரும் ஜனவரி மாதம் ஐ.நா., பொதுச்செயலராக பதவி ஏற்க உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...