வினாத்தாள் வெளியானது; பி.யூ.சி., கல்வி துறைக்கு தொடர்பில்லை!!

 பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு வேதியியல் வினாத்தாள், முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், பி.யூ.சி., கல்வித் துறைக்கு தொடர்பில்லை என, சி.ஐ.டி., போலீசார் தெரிவித்து உள்ளனர்.


கடந்த மார்ச் - ஏப்ரலில் நடந்த, பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு இறுதி தேர்வின் போது, வேதியியல் வினாத்தாள் இருமுறை வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


முதன்முறை வினாத்தாள் வெளியான போது, பி.யூ.சி., கல்வித் துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால், 40க்கும் மேற்பட்ட ஊழியர்களை, அப்போதைய ஆரம்ப மற்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர், சஸ்பெண்ட் செய்தார்.

இந்த வழக்கு, சி.ஐ.டி.,யிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், வினாத்தாள் வெளியானதில் கல்வித் துறை அதிகாரிகளுக்கோ, ஊழியர்களுக்கோ தொடர்பில்லையென்று தெரிய வந்துள்ளது.

ஓய்வு பெற்ற கல்வித் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், கல்வித் துறையில், மேல்மட்டத்திலோ அல்லது அடிமட்டத்திலோ உள்ளவர்களின் உதவியின்றி, வினாத்தாள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பில்லை. இருப்பினும், சி.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிக்கையில் யாருக்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டிருப்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும் என்றார்.

சி.ஐ.டி., துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, கல்வித் துறையிலும், கருவூலத்திலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அவர்கள் கூறிய சில ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும் என, பல்கலைக் கழக கல்வி துறை அதிகாரிகள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...