மலைப்பாம்போடு போராடி உயிர் பிழைத்த சிறுவன்!!!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தன்னை தாக்கிய மலைப்பாம்பிடம் இருந்து சண்டையிட்டு அதிர்ஷ்டவசமாக தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டான். வைஷக் அத்ராஷ் (11), ஆங்கிலப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் மாலை 6.30 மணியளவில்

விளையாட சென்றபோது 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளான். மலைப்பாம்பிடம் இருந்து கடுமையாகப் போராடி தன் உயிரைக் காப்பற்றிக்கொண்டுள்ள வைஷக் கூறியதாவது:

“நான் விளையாடிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மலைப்பாம்பிடம் மாட்டிக்கொண்டேன். அது மெல்ல நகர்ந்து வந்து என் தொடையை இருக்கமாக பிடித்துக் கொண்டது. பின் என் கையில் கொத்த முயற்சித்தது. நான் என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தியவாறே அருகில் இருந்த டைல்ஸ் கல்லை எடுத்து பாம்பின் மேல் வேகமாக தாக்கினேன். இதையடுத்து பாம்பு தன் பிடியினை விட்டது. சுமார் 2௦ நிமிடத்துக்கு மேலாக அதோடு போராடி மீண்டு வந்தேன்” என்று கூறியுள்ளான்.

இதில் பாம்போடு போராடியதில் சிறுவனுக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட சிறுவனின் உறவினர் ஒருவரின் உதவியால் அப்பகுதியில் உள்ள முல்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

மலைப்பாம்பு தாக்கியதால் சிறுவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் செப்டிக் ஆகாமல் இருக்க சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி மலைப்பாம்பு சுற்றித் திரிவதாக சிறுவனின் தாயார் ஹரினாக்ஷி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...