ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு பல மாதங்கள் வரை வழங்கப்படாமல் இருக்கிறது. இதனால், தீபாவளி முதல் புதிய ரேஷன் கார்டுகளை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை
அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் செயல்படுத்தப்பட்டாலும், இப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி தொடர்ந்து வழங்கப்படும். மேலும், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும். இதற்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது” என்று தெரிவித்துள்ளது.
அந்தியோதியோ அன்னயோஜனா திட்டப்பயனாளிகளுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும். உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூபாய் 1,193 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.