முதுநிலை சித்த மருத்துவம் - அக்டோபர் 31 கலந்தாய்வு!!!

முதுநிலை சித்த மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு அக்டோபர் 31ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. சென்னை, பாளையங்கோட்டை போன்ற மாவட்டங்களில் சித்த மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், 2016-2017ஆம் ஆண்டுக்கான, முதுநிலை சித்த

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்வு காலை 11 மணி அளவில் தொடங்கப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் மூலமும் எஸ்.எம்.எஸ் மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் கிடைக்காதாவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் தேர்வுக்குழு அலுவலகத்தில் இயங்கும் உடனடி சேர்க்கை கவுன்ட்டரில் தங்கள் அசல் சான்றிதழ், கேட்பு வரைவோலை ஆகியவற்றை சமர்ப்பித்து கல்லூரியில் இணைந்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். பெரும்பாலான மாணவர்கள் சித்த மருத்துவ படிப்புக்கு ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...