2016ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, ஆலிவர் ஹார்ட் மற்றும் பெங்க்ட் ஹோம்ஸ்ட்ரோம் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு, கடந்த 1969ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் நார்வே நாட்டைச் சேர்ந்த ரோக்னர் ஃப்ரிஸ்ச் மற்றும்
நெதர்லாந்தைச் சேர்ந்த ஜான் டின்பெர்கன் ஆகிய இருவருக்கும் முதன்முதலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன்பின்னர், ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
1998ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த அமர்த்தியா சென் நோபல் பரிசு வென்றார். கடந்த 2015ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அங்கஸ் டீட்டனுக்கு நோபல் வரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2016ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஸ்வீடன் நாட்டின் தலைநகரம் ஸ்டாக்ஹோமில் இன்று நடந்தது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இங்கிலாந்தின் ஆலிவர் ஹார்ட் மற்றும் ஃபின்லாந்து நாட்டின் பெங்க்ட் ஹோம்ஸ்ட்ரோம் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆலிவர் ஹார்ட்டும், மஸ்ஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பெங்க்ட் ஹோம்ஸ்ட்ரோமும் “பிரச்னைகள் இல்லாமல் ஒப்பந்தங்களை வடிவமைப்பது எப்படி?” என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.