அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் மிக பிரம்மாண்ட பாலம் அமைக்கப்படுகிறது. ரயில் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக இரண்டடுக்கு பாலமாக இது அமைக்கப்படுகிறது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, எல்லையோர
பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த பிரம்மாண்டமான பாலத்தை பற்றிய விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.
இந்த பாலம் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 9.15 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. ஆற்றில் குறுக்கில் மட்டும் 4.94 கிமீ நீளத்துக்கு பாலம் அமைக்கப்படுகிறது. ஆனால், சாலையை இணைக்கும் பாலம் 9.15 கிமீ தூரத்துக்கு நீள்கிறது.
இதுவரையில் இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை தன் வசம் வைத்திருக்கும் மும்பையில் உள்ள பந்த்ரா வோர்லி கடல் பாலம் 3.55 கிமீ நீளம் உடையது. ஆனால், அதைவிட இரு மடங்குக்கும் அதிகமான நீளத்துடன் இந்த புதிய பாலம் அமைக்கப்படுகிறது.
போகிபில் பெயரில் அழைக்கப்படும் இந்த பாலம் ரூ.938 கோடி செலவீனத்தில் கட்டப்பட்டு வருகிறது. 2002ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன.
இந்த பாலத்தின் மிக முக்கிய சிறப்பு, இது இரண்டடுக்கு பாலமாக அமைக்கப்படுகிறது. கீழே ரயில் பாதையும், மேலே வாகனங்கள் செல்வதற்கான பாலமாகவும் அமைக்கப்படுகிறது. இதன்மூலமாக, சுமார் 5 மில்லியன் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு பயன்படும்.
இந்த புதிய பாலத்தின் மூலமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான பயண நேரம் 4 மணிநேரம் வரை குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது தேஸ்பூர் பாலம்தான் இரு மாநிலங்களை இணைக்கம் பாலமாக இருக்கிறது
இனி சுற்றிக் கொண்டு வருவது இந்த புதிய பாலத்தின் மூலமாக தவிர்க்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், எல்லையோர பாதுகாப்பிலும் இந்த புதிய பாலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்த பாலம் அமைப்பதன் மற்றொரு முக்கிய நோக்கம், அருணாச்சலப் பிரதேச எல்லைகளில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை முடிவு கட்டவும் பயன்படும். அதாவது, இப்போது அருணாச்சலப் பிரதேசத்தில் முறையான சாலை போக்குவரத்தும், விமான தளமும் இல்லாத நிலை இருக்கிறது.
ஆனால், இந்த புதிய பாலத்திலிருந்து வெறும் 20 கீமீ தொலைவில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைகளுக்கு ராணுவ துருப்புகளையும், தளவாடங்களையும் எளிதாகவும், விரைவாகவும் அனுப்ப முடியும். அசாம் மாநிலம், திப்ரூகர் நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது
இந்த பாலத்தில் பீரங்கி உள்ளிட்ட கனரக ராணுவ வாகனங்கள் செல்வதற்கு ஏதுவான கட்டமைப்புடன் நவீன தொழில்நுட்ப முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதனால், மிக வலுவான பாலமாகவும் இது குறிப்பிடப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய பாலம் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
.