தவறுதலாக சாதிப் பெயர்- உயர்நீதிமன்றம் தீர்வு!

நீட் பொதுத்தேர்வில் தங்களது சாதிப் பெயரை பொதுப்பிரிவு என்று குறிப்பிட்ட மூன்று மாணவர்களை ஓபிசி பிரிவினர் என்று கருதி, அவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



விஷ்ணு பார்கவி, கெவின் மற்றும் சதீஷ் என்ற மூன்று மாணவர்கள் நீட் எனப்படும் மருத்துவ பொதுத்தேர்வை எழுதும்போது, சாதி என்று குறிப்பிட்ட இடத்தில், தங்களது அறியாமையால் தவறாக பொதுப்பிரிவினர் என்று குறித்துவிட்டனர். இதனால் இவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் தவறாக சாதிப் பெயரை குறிப்பிட்ட காரணத்தால் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன், தவறாக குறிப்பிட்ட காரணத்தால், அவர்களின் முக்கியமான ஒரு வருடம் வீண் போக வேண்டுமா? அரசியலமைப்பு சட்டம் 226இன் கீழ் இந்த மனுவை விசாரித்து, அவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டார்,

இந்த மூவரும் நீட் பொது மருத்துவத் தேர்வில் முறையே 133, 135, மற்றும் 134 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீதிபதி குறிப்பிடுகையில், ‘சிபிஎஸ்இ ஒரு மாணவர் இவ்வாறான தவறுகளை செய்யும்போது திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பைத் தருகிறது’ என்று கூறியது. இந்த தீர்ப்பு, செப்டம்பர் 30ஆம் தேதி மருத்துவக் கல்லூரியில் சேர கடைசிநாள் என்று உச்சநீதிமன்றம் கூறியதற்கு முதல்நாள் இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் அம்மாணவர்களுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...