கல்வி அதிகாரி பணி நியமன தாமதம்: வருந்தும் ஆசிரியர்கள்!

மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படாததால் தேர்வு எழுதியவர்கள் கவலையில் உள்ளனர். தமிழக பள்ளி கல்வித்துறையில் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) பணியிடங்கள் 75 % பதவி உயர்வு மூலமாகவும், 25 % நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், நேரடி நியமனத்துக்கான போட்டித் தேர்வை (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்)

டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. டிஇஓ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2014ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 8ஆம் தேதி நடத்தப்பட்டது. 11 காலியிடங்களுக்கான தேர்வை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட். பட்டதாரிகள் எழுதினர். அதில், மூன்று ஆயிரம் பேர் அடுத்தகட்ட முக்கிய தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். முதன்மைத் தேர்வு 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6, 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வு எழுதியவர்கள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், “டிஇஓ நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் முக்கிய தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. தேர்வு முடிவு வெளியான பிறகு அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்த வேண்டும். ஆனால், பணி நியமனம் முடிய மூன்று ஆண்டுகள் ஆகிவிடும். உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்காக நடத்தும் போட்டி தேர்வின் முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சில மாதங்களிலேயே வெளியிட்டு விடுகிறது. எனவே, தேர்வு முடிவை விரைவாக வெளியிட்டு, நேர்முகத் தேர்வையும் முடிக்க வேண்டும். பின்னர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிடவேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் பல நூறு பள்ளிகளில் ஓராசிரியர்கள் உள்ள நிலையில் உயரிதிகாரிகளும் இல்லாதது போனால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...