இழுத்து... இழுத்து... இறுதியில் சம்மதம் !!

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை முன் பணம் வழங்காததை கண்டித்து நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருவழியாக நேற்று மாலை, முன்பணம் வழங்க அனுமதிக்கப்பட்டது.

அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர், கண்டக்டர், பணிமனை ஊழியர் என ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். ஆண்டுதோறும், ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்குவது வழக்கம்; தீபாவளிக்கு அரை கிலோ சுவீட் வழங்குவர். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த போது, கடந்த ஆண்டு சுவீட் வழங்க ஏற்பாடு செய்தார்.இந்த ஆண்டு முன் பணம் வழங்கவில்லை; விண்ணப்பத்தை கூட அதிகாரிகள் பெற மறுத்து விட்டனர். சுவீட்டும் 'கட்' ஆனது. 'இதற்கான காரணத்தை வெளிப்படையாக கூற முடியாது' என அதிகாரிகள் கூறிவிட்டனர்.கொதிப்படைந்த ஊழியர்கள் சென்னை, மதுரையில் நேற்று காலை 4:00 முதல் காலை 6:30 மணி வரை பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



நிர்வாகிகள் கொதிப்பு : இதுகுறித்து தொ.மு.ச.,- சி.ஐ.டி.யு.,- பணியாளர் சங்கம், ஜெ.ஐ.டி.யு.சி.,- ஐ.என்.டி.யு.சி., எல்.எல்.எப்., -வி.சி., தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். அவர் மருத்துவமனையில் இருப்பதால் பண்டிகை முன்பணம், சுவீட் கிடையாது என்பதில் நியாயமில்லை. அதிகாரிகள் வெளிப்படையாக பேச மறுக்கின்றனர். அதிகாரிகளை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது; தொடர் போராட்டங்கள் நடக்கும் என்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை நடந்த பேச்சில் முன்பணம் வழங்க அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர்; 'சுவீட்' பற்றி 'வாய்திறக்க' மறுத்துவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...