தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் நவ. 1 முதல் அமல் !!

கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்ட போதும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், நவ., 1 தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படும்' என, மாநில அரசு அறிவித்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்தினால், தமிழகத்தின் மொத்த மக்கள்

தொகையில், 50.55 சதவீதம் பேர் மட்டுமே அரிசி பெற தகுதி உடையவர்களாக இருப்பர்.

மத்திய அரசு, வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கான அரிசி ஒதுக்கீட்டு கொள்முதல் விலையை, நவ., 1 முதல் மாற்றி அமைத்துள்ளது. இதனால், தமிழக அரசுக்கு தற்போது ஏற்படும் செலவினத் தொகையான, 2,393 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக, ஆண்டுக்கு, 2,731 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, தமிழகத்திற்கு ஏற்படவுள்ள பாதகங்களை நன்கு உணர்ந்து, மத்திய அரசின் சட்டம் எவ்வாறாக இருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி ஒதுக்கீடு, தொடர்ந்து குறையின்றி வழங்கப்பட வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.

அதன் அடிப்படையில், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்:

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், நவ., 1 முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும்

* சட்டத்தை அமல்படுத்தினாலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி, ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தால், மாதம் ஐந்து கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும். ஆனால், தமிழகத்தில் தற்போது, 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது; அது தொடர்ந்து வழங்கப்படும்

* ஒரு குடும்பத்தில்

இருவர் இருந்தால், தற்போது வழங்கப்படும், 16 கிலோ

அரிசி தொடர்ந்து வழங்கப்

படும்

* மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு, மாதம் ஒன்றுக்கு, 20 கிலோ அரிசி என, தற்போது நடைமுறையில் உள்ள உச்ச வரம்பின்றி, ஒவ்வொருவருக்கும், ஐந்து கிலோ

வீதம் உச்ச வரம்பின்றி வழங்கப்படும்

* உதாரணமாக, ஐந்து உறுப்பினர்கள் உள்ள குடும்பத்திற்கு, தற்போது மாதம், 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

இனி, 25 கிலோ அரிசி வழங்கப்படும்

* அந்தியோதியோ அன்னயோஜனா திட்டப்

பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும், 35 கிலோ அரிசி, தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதாலும், தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதாலும், தமிழக அரசுக்கு, ஆண்டுக்கு, 1,193 கோடி ரூபாய் செலவாகும்

* தற்போது செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ள இந்த உணவு பாதுகாப்பு சட்டம், அனைவருக்கும் உணவு பாதுகாப்பை வழங்கும் சிறப்பான திட்டமாக, இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செயல்படுத்தப்படாத திட்டமாக அமையும்

* முன்னுரிமை குடும்பங்களுக்கு மட்டுமே அரிசி வழங்க வேண்டும் என, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் வலியுறுத்திய போதும், தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...