விபத்தில் காயம் அடைந்து கிடக்கும் நபர்களுக்கு உதவி செய்வோரின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது புதிய அரசாணை வெளியீடு !!

சென்னை, விபத்தில் சிக்குவோருக்கு உதவி செய்யும் நபர்களின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகளை போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு விதித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–கடந்த 29.10.14 அன்று சுப்ரீம் கோர்ட்டு

பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிசெய்பவர்களுக்கான பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதற்கேற்றபடி, 13.7.16 அன்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அரசாணை விவரம் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி உதவிசெய்பவர்கள் மற்றும் நேரடியாக பார்த்த சாட்சிகள் யாரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லலாம். அவர்களிடம் எந்தக்கேள்வியும் கேட்காமல் முகவரியை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல அனுமதிக்கவேண்டும்.விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவோருக்கு அரசு தக்க சன்மானம் வழங்கவேண்டும். இது விபத்தில் சிக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆர்வமூட்டும். உதவி செய்பவர்கள் யாரும் எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.கட்டாயப்படுத்தக்கூடாது சாலை விபத்தினால் காயமடைந்து கிடக்கும் நபர் பற்றிய விவரங்களை போன் மூலம் போலீஸ் நிலையம், விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றுக்கு சொல்லும்போது, அவரது சொந்த விவரங்களை நேரிலோ அல்லது போன் மூலமாகவோ கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. அதைத் தருவது அவரது விருப்பம்.மருத்துவ படிவங்களையும் பூர்த்தி செய்ய அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. உதவி செய்தவரின் பெயர் மற்றும் சொந்த விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தும் அலுவலர் மீது ஒழுங்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.உடனடி சிகிச்சை உதவு செய்தவர்கள் யாராவது சாட்சி சொல்ல தாமாக விருப்பத்தை தெரிவித்தால் அவரிடம் காவல்துறை ஒருமுறை மட்டும் விசாரணை மேற்கொள்ளலாம். உதவிசெய்பவர்களை துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது.விபத்தில் உதவுபவர்கள் யாரும் காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினராக இல்லாதபட்சத்தில், அவர்களிடம் இருந்து செலவீனம் எதையும் செலுத்தவேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரக் கூடாது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தரவேண்டும்.அறிவிப்புப் பலகை சாலை விபத்தினால் அவசர சிகிச்சை அளிக்கவேண்டிய சூழ்நிலையில் ஒரு மருத்துவர் கவனமின்றி அக்கறை செலுத்தவில்லை என்றால், அவர் மீது இந்திய மருத்துவக் கழக ஒழுங்கு பணி நடத்தையின்மை எனக்கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.விபத்தில் உதவிசெய்வோர் கைது செய்யப்படமாட்டார்கள், வைப்புத் தொகை செலுத்த கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என்று, அனைத்து ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில நடைமுறை மொழியில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.மீறினால் நடவடிக்கை உதவி செய்தவர்கள் விரும்பினால், காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்த நேரம், விபத்து நிகழ்ந்த இடம், நாள் போன்றவை தொடர்பான ஒப்புகையை ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்கலாம். இதற்கான ஒப்புகை படிவத்தை மாநில அரசு தயார் செய்து அனைத்து ஆஸ்பத்திரிக்கும் தெரியப்படுத்த வேண்டும்.அனைத்து பொது மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் இந்த நடைமுறையை உடனடியாக அமலுக்கு கொண்டுவரவேண்டும். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...