ஆதிதிராவிடர்களுக்கு ஓர் நற்செய்தி!
சுய தொழில் தொடங்க ஆதிதிராவிடர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
“விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள்
சுயதொழில் தொடங்க அரசு சார்பில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதில் மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்களுக்கானது), நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்) மற்றும் பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல் திட்டங்கள் சார்பில் பயன்பெற 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் தகுதியானவர்கள். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சம் ஆகும். பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை சில்லரை நிலையம் அமைப்பதற்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் ஆகும்.
அதேபோல் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மருத்துவமனை, மருந்துகடை, கண் கண்ணாடியகம், மூட நீக்க மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைக்க அதற்கான படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தகுதியானவர்கள். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சம் ஆகும். மருத்துவமனை அமைக்கும் திட்டத்திற்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் ஆகும். இதற்கு அரசு அங்கீகார நிறுவனத்தில் உரிய பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த திட்டங்களில் பயன்பெற விரும்புவர்கள்
TAHDCO என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று, ஓட்டுனர் உரிமம் எண், கல்வித்தகுதி, வயதிற்கான ஆதார சான்று மற்றும் விண்ணப்பம் செய்பவரின் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்று அவர் அதில் கூறியுள்ளார்.