சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் இயங்கி வருகிறது. பூமியில் இருந்து செல்லும் விஞ்ஞானிகள், அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். தொடர்ச்சியாக இதுபோல் விஞ்ஞானிகள் சென்று வருகின்றனர்.
முதன்முறையாக இந்த நிலையத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விண்வெளி நிலையத்தையும் வெளியே காணப்படுபவனவற்றையும் இந்த ஒளிபரப்பு காட்டுகிறது.
பூமியிலிருந்து 350 கி. மீ., தொலைவுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த ஒளிபரப்பு பக்கத்தை 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 50 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள மூன்று விஞ்ஞானிகளுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் நேரடியாக பேசினார். 20 நிமிடம் நடந்த இந்த ஒளிபரப்பில், பல பார்வையாளர்கள் விஞ்ஞானிகளிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.