சாதனைக்கு டாக்டர் பட்டம்!!!

இளைஞர்கள் தங்கள் உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொண்டால், எதிர்காலமும் சிறப்புடன் அமையும்,'' என, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின், 12வது பட்டமளிப்பு விழாவில், பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் கூறினார். அவருக்கு, கல்லுாரி சார்பில், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.




சென்னை, மறைமலைநகரை அடுத்த பொத்தேரியில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தின், 12வது பட்டமளிப்பு விழா, நேற்று முன்தினம் துவங்கியது; நேற்றும் நடைபெற்றது. முதல் நாளில், 6,600 மாணவர்கள் பட்டம் பெற்ற நிலையில், இரண்டாம் நாளான நேற்று, பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் உயிர் அறிவியல் போன்ற பல பிரிவுகளைச் சேர்ந்த, 6,000 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல துறைகளைச் சேர்ந்த, 190 மாணவர்கள், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.



விழாவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனுக்கு முதுமுனைவர் பட்டமும், ரியோ ஒலிம்பிக்கில் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்ற, ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண், சாய்னா நேவாலுக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. சாய்னா நேவால் பேசும் போது, ''பாட்மின்டன் போட்டியில், இந்தியாவிற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இளைஞர்களாகிய நீங்கள் உடலை ஆரோக்கியத்தோடு வலுப்படுத்தினால் உங்களின் எதிர்காலமும் சிறப்புடன் அமையும்,'' என்றார்.



முன்னாள் உயிர் நெறிமுறைகள் பிரிவின் தலைவர் இவான் சாமுவேல் டோபல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவிற்கு, கல்லுாரி வேந்தர் முனைவர் ப.சத்தியநாராயணன் தலைமை வகித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...