கவிஞர் கண்ணதாசன் ( ஜூன் 24 1927--- அக்டோபர் 17, 1981) நினைவு நாள் இன்று !

கவிஞர் கண்ணதாசன் ஒரு வரலாற்று நாயகன்---புகழ் பெற்ற  தமிழ்த்  திரைப்படப்  பாடலாசிரியர்--சிறந்த கவிஞரும்  ஆவார்--கட்டுரைகள் பல எழுதியவர்---பல இதழ்களின் ஆசிரியர். .கண்ணதாசனை, தமிழ்நாட்டின்  அரசவை கவிஞராக  நியமித்தவர்  எம் .ஜி .ஆர்  ஆவார்.
கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல், தமிழன்னை யால், அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம்.அவர் எட்டாம் வகுப்பு வரைத்தான் படித்துள்ளார்.சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.


 .
சிறு வயதில், 7000  ரூபாயிக்கு ஒருவர்,   கண்ணதாசனை தத்தெடுத்துக்கொண்டார் .
15 வயதினிலேயே  கவிதைகள்  எழுதத்  தொடங்கினார். 17 வயதில் அவரது முதல் கவிதை  வெளிவந்தது. 1950 ல் கண்ணதாசனின் மண வாழ்க்கை  தொடங்கியது.இவருக்கு முன்று மனைவிகள்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. . தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார்.
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர்.

மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன்  அடக்கம் செய்யப்பட்டது.

  கண்ணதாசன்  அவர்கள், சாகாவரம் பெற்றவர், அவர் இறந்தும் அவரது  பாடல்கள் நம் மனங்களை கொள்ளைக்கொண்டுள்ளது.
அவரது பாடல்கள் காலத்தால்  அழியாதது, ஈடுஇணையற்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...