தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு மாணவ–மாணவிகள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
‘மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஊனத்தின் தன்மை 40 சதவிகிதத்துக்கு அதிகமாக உள்ள 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்புக்கு ரூ.8,465 முதல் ரூ.46,000 வரை வழங்கப்படும். 11ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பட்ட மேற்படிப்புக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளும் இந்த கல்வி உதவித்தொகையை பெற்று பயன் அடையலாம்.
எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, கல்விச்சான்று, வருமானச்சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தாங்கள் கல்வி படிக்கும் பள்ளி மற்றும் கல்வி நிலையங்களின் மூலமாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் www.scholarship.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர், அதன் நகலை பதிவிறக்கம் செய்து பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 31ஆம் தேதி கடைசி நாள். எனவே தேனி மாவட்டத்தில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.