கைக்குட்டைக்கும் அனுமதி இல்லை: டி.ஆர்.பி., கட்டுப்பாடு !

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அக்.,22ல் நடத்தும் தேர்வில் தேர்வர்கள் கைக்குட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திஉள் ளது. அரசு பொறியியல் கல்லுாரிகளில் சீனியர் விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் ஜூனியர் விரிவுரையாளர் என 222 காலி பணியிடங்களுக்கு அக்.,22ல் மதுரை உட்பட 9 மாவட்டங்களில் டி.ஆர்.பி., சார்பில் தேர்வு நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் 12 மையங்களில் இத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடத்துவது தொடர்பாக மதுரையில் இணை இயக்குனர் குப்புசாமி தலைமையில் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில், தேர்வர்கள் 2 பேனா, ஹால் டிக்கெட் மட்டுமே அறைக்குள் கொண்டு செல்ல வேண்டும். வாட்ச், கைக்குட்டை உட்பட எந்த பொருளும் அனுமதி இல்லை. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தேர்வர்களின் ஓ.எம்.ஆர்., சீட்டில் விடை அளித்தது குறித்து அறைக்கண்காணிப்பாளர்கள் தனித்தனியே குறிப்பெடுக்க வேண்டும். விடை எழுதாமல் காலம்கடத்தும் தேர்வர்கள் பதிவெண்ணை குறித்துவைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.கடந்த டி.ஆர்.பி., தேர்வில் பெண் தேர்வர் ஒருவர் வினாத்தாளை 'வாட்ஸ்ஆப்' மூலம் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இத்தேர்வில் தேர்வர்கள் போலீசார் சோதனைக்கு பின் தான் அனுமதிக்கப்படுவர் போன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.தற்போது தேர்வர்கள் கைக்குட்டை கூட தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு, மனித உரிமையை மீறும் செயல் என தேர்வர்கள் அதிருப்தி

தெரிவிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...