அண்ணா பல்கலை தேடல் குழு நியமனம் !!

அண்ணா பல்கலை துணைவேந்தர் தேடல் குழுவில், இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அண்ணா பல்கலையின் துணை வேந்தர் ராஜாராம், மே மாதம் ஓய்வு பெற்றார். ஐந்து மாதங்களாகியும், புதிய துணை வேந்தர் நியமனத்துக்கான பணிகள் நடக்க வில்லை. குறிப்பாக, துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான, தேடல் குழு நியமிக்கப்படாமல் இருந்தது.


இந்நிலையில், தேடல் குழுவுக்கு, இரண்டு உறுப்பினர்களை, தமிழக அரசு நியமித்துள்ளது. பல்கலை சிண்டிகேட் சார்பில், மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன், அரசு சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹேமந்த்குமார் சின்ஹா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, பல்கலையின் வேந்தரான, கவர்னர் தரப்பில் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும். அந்த பிரதிநிதியே, தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். அதற்கான கோப்பு, கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, உயர்கல்வி துறை தெரிவித்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...