வருமான வரி ‘இ–பைலிங்’: நாளை கடைசி நாள்!

தனியார் நிறுவனங்கள், இணையதளம் வாயிலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. ரூபாய் ஒரு கோடிக்கு அதிகமாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், ரூபாய் 25 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் ஈட்டும் தனி நபர்கள், கூட்டு நிறுவன பங்குதாரர்கள், ஆடிட்டர் மூலம் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டியது அவசியம். அத்தகையவர்கள்

இணையதளம் வழியாக, ‘இ-பைலிங்’ முறையில் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன், ஆடிட்டரின் தணிக்கை அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். கறுப்புப்பணத்தை வெளியில் கொண்டு வரும் திட்டத்துக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்ததால், ‘இ-பைலிங்’ காலக்கெடு அக்டோபர் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அது நாளையுடன் நிறைவடைகிறது.

இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள், “நாங்கள் விதித்த காலக்கெடுவுக்குள் கணக்கு தாக்கல் செய்வோருக்கு அதில் தவறு இருந்தாலோ, ஏதேனும் தகவல் விடுபட்டு இருந்தாலோ, திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். காலம் தவறி மனு தாக்கல் செய்வோருக்கு அந்த சலுகை கிடைக்காது. ஆடிட்டரின் அறிக்கையை இணைக்காவிட்டால், அபராதம் செலுத்த வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...