கணவரை வீட்டை விட்டு அனுப்பியதால் அவருக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகே சதாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அனில் (38). இவரது மனைவி சரிதா (47). இவர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு குட்டாப்பூர் தானம்மன் கோயிலில் நடைபெற்ற பல ஜோடிகள் கூட்டு திருமணத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
சரிதா பட்டப்படிப்பு படித்தவர். பள்ளி ஒன்றில் முதல்வராக இருந்தார். அதோடு அனிலை விட ஒன்பது வயது மூத்தவர். அனில் சரியாக படிக்காதவர். வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். எனினும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் அனிலை, சரிதா வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். இதனால் தங்குவதற்கு இடமின்றி அனில் தெருவில் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து மகாராஷ்டிரா சோலாப்பூர் நீதிமன்றத்தில் அனில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் படிக்காமல் இருந்ததாலும், வேலைக்குச் செல்லாமல் இருந்ததாலும் என் மனைவி என்னை வீட்டு வேலை செய்யும்படி துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் ஒருகட்டத்தில் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். அவர் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். எனவே, என் வாழ்க்கைக்கு அவர் உதவித் தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வி.பட்டீல் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி முன் அவரது மனைவி சரிதா ஆஜராகி, ‘எனது கணவர் கூறுவதெல்லாம் பொய். அவர் என்னை வீட்டில் அடித்து உதைத்தார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். ஒருமுறை தீபாவளி பண்டிகையின்போது அவர் அடித்ததில் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டது. எனவேதான் அவருடன் சேர்ந்து வாழ முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்று கூறினார்.
இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி, ‘வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட கணவருக்கு சரிதா மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.