பெண்களின் பாதுகாப்புக்கு புதிய மொபைல் ஆப்! !!

பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பெண்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவி செய்வதற்காக அபாய பட்டன் என்ற மொபைல் ஆப்பை 2017 ஜனவரி ஒன்றாம் தேதியில் அறிமுகம் செய்யப் போவதாக டெல்லி காவல் துறை
உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி பி.டி.அகமது, நீதிபதி அசுதோஸ் குமார் முன்பு தலைநகர காவல்துறை அளித்த உறுதிச் சான்றில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தற்போது அவசர அழைப்பு எண்களாக இருக்கும் 100,101,102 ஆகிய எண்களை நீக்கி விட்டு அவசர உதவிக்கு ஒரே எண்ணாக 112 என்ற எண்ணை 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்ய உள்ளோம். தற்போது உள்ள அனைத்து அவசர அழைப்பு எண்களும் இரண்டாம் நிலை எண்களாக மாற்றப்படும்.

உலக அளவில் முக்கிய மாநகரங்களில் மற்ற காவல்துறையினர் அவசரமான சூழ்நிலைகளில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பெண்கள் பாலியல் வன்முறை மற்றும் தாக்குதலுக்கு ஆளாகும் நேரங்களில் உடனடியாக தங்களது செல்போன் மூலம் போலீஸாரை உதவிக்கு அழைக்கலாம். பெண்களிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள செல்போன்களிலும், எதிர்காலத்தில் வரும் செல்போன்களிலும் அபாய பட்டன் வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பெண்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. பெண்கள் பாதுகாப்புக்கென இதுபோன்ற பல்வேறு மொபைல் ஆப் அமைக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...