ஒரு பக்கம் நீதிபதிகளின் நியமனங்களை தீர்மானிக்கும் கொலீஜியம் அமைப்பில் மத்திய அரசு தலையிட்டுள்ளது. இன்னொரு பக்கம் வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இடையில் தொடர் மோதல் போக்கும் உள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக நியமிப்பது
தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் மூத்த வழக்கறிஞர்களாக நியமிப்பது தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம், நீதிபதிகளிடமே தொடர்ந்து இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
16 வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பொதுநல வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ‘மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறையை மேம்படுத்த வழக்கறிஞர் சங்கத்திடம் இருந்து ஆலோசனைக் கேட்பதற்கு உச்சநீதிமன்றம் தயாராக உள்ளது. இதுதொடர்பான பரிந்துரைகளை வழக்கறிஞர்கள் சங்கம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அதன்மீது இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கே உண்டு. பழைய நடைமுறையில் உங்களுக்கு திருப்தியில்லை என்றால் நம்மிடம் வேறு நடைமுறை ஏதேனும் உள்ளதா? அப்படி இருந்தால் அதை நீங்கள் தெரிவிக்கலாம்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அப்போது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் (எஸ்சிபிஏ) தலைவரும், மூத்த வழக்கறிஞரான துஷ்யந்த் தவே கூறுகையில், ‘மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் சங்கம், அட்டார்னி ஜெனரல் ஆகியோரின் கருத்தையும் கேட்க வேண்டும்’ என்றார். வழக்கு விசாரணையின்போது அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும், மனுதாரர் இந்திரா ஜெய்சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.