ஜெ.,வை சந்திக்க வந்த தலைவர்கள்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசினர்
கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:முதல்வர் உடல்நிலை குறித்து நல்ல தகவலை டாக்டர்கள்
கூறினர் . உடல்நிலை தேறி வருவதாக கூறினார்கள். ஜெ., பூரண குணமடைய கேரள மக்கள் பிரார்த்தனை செய்வார்கள் என்றார்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறியதாவது: ஜெ., உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஜெ., உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து டாக்டர்கள் கூறினர். உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக கூறினார். அண்டை மாநில முதல்வர் என்ற முறையில் சந்திக்க வந்தேன். ஜெ., விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன் என்றார்.
கேரள கவர்னர் சதாசிவம் கூறியதாவது: ஜெ., விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் எனக்கூறினார். பின்னர் அவர் தமிழக கவர்னர் மாளிகை சென்றார்.
தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தங்கபாலு கூறுகையில், முதல்வர் ஜெ. விவரைவில் குணமடைந்து பணியை தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.