நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் ரிச்சர்டு ஜான் பேல்: தீவிர சிகிச்சையில் ஜெயலலிதா!

வெளிநாட்டில் சிகிச்சை பெற அப்பல்லோ நிர்வாகம் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி இருந்தும், அவர் பிடிவாதமாக மறுத்து வந்தார். அப்பல்லோ டாக்டர்களிடமும் டெல்லி, மும்பையில் இருந்து வந்த டாக்டர்களிடமும் ஜெயலலிதா போதிய அளவுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்கிறது சிறப்பு மருத்துவக்குழு

வட்டாரம். தற்போது, லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையில் இருந்து டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். நேற்று மாலையில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல் தலைமையில்தான் ட்ரீட்மெண்ட் நடக்கிறது.

யார் இந்த டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல்?

லண்டனில் மிகவும் புகழ்பெற்றது கிங் மருத்துவ கல்லூரி. இந்த மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைத்துறை பேராசிரியராக இருப்பவர் ரிச்சர்டு ஜான் பேல். அத்துடன் செயிண்ட் தாமஸ் என்ற அறக்கட்டளையையும் இவர் நிர்வகித்து வருகிறார். 1984ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தாலும், அடுத்தடுத்து தீவிர சிகிச்சை தொடர்பான மேல்படிப்புகளைப் படித்திருக்கிறார் ரிச்சர்டு ஜான் பேல். தற்போது லண்டனில் மிகச் சிறந்த மருத்துவமனை என்று சொல்லப்படும் லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையிலும் ஆலோசகராகப் பணி புரிகிறார். தீவிர சிகிச்சை என்று பொதுவாக சொல்லப்பட்டாலுமேகூட, குறிப்பாக இவர் கடுமையான சீழ்பிடிப்பு மற்றும் நுரையீரல் காயம், உடல் உறுப்புகள் செயல் இழப்பு துறைக்கான தலைவராகச் செயல்படுகிறார். லண்டனில் இவரது அப்பாயின்ட்மெண்ட் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மாதக்கணக்கில் இவரது அப்பாயின்ட்மெண்டுக்காக காத்திருப்பவர்கள்கூட உண்டு. The European Society of Intensive Care Medicine என்பது ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகப்பெரிய மருத்துவ அமைப்பு. இதில் டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல், முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பல்வேறு உலக நாடுகளில் சர்வதேச அளவில் நடந்த மருத்துவக் கருத்தரங்குகளில் டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தனி நபர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் ஜான் ரிச்சர்டு பேல், லண்டனில் இருந்து வந்திருக்கிறார் என்றால் அது ஜெயலலிதாவுக்காக மட்டும்தான்!

ஜெயலலிதாவின் ரிப்போர்ட்கள் அனைத்துமே சில தினங்களுக்கு முன்பே ஜான் ரிச்சர்டு பேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜான் ரிச்சர்டு பேலின் நேர்முக உதவியாளர் அலிசன் லீவெர்ட் என்பவருடன்தான் அப்பல்லோ மருத்துவர்கள் தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். அதன் பிறகு ஜெயலலிதாவைப் பற்றி சொல்லித்தான் ஜான் ரிச்சர்டு பேல் சென்னைக்கு வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்கள் ஜான் ரிச்சர்டு பேல் சென்னையில் தங்கியிருப்பாராம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...